Thinker Kumar
@thinkerkumar
71
friends
மனித சேவையே மகத்தான சேவை என நாங்கள் நம்புகிறோம் - JCI இயக்கத்தின் முக்கியமான கோட்பாடே நான் நம்புவதும்... பல வேடிக்கை மனிதரைப் போலே என்று பாரதி இகழ்ந்த பலரில் நானும் ஒருவனல்ல... * 31/12/2021 வரை 72 முறை இரத்த தானம் * 2 முறை முடிதானம் * சிவகங்கை மெடிக்கல் காலேஜுக்கு உடல் தானம் பதிவு முடிந்தவரை அடுத்தவருக்கு உதவுகிறேன்... ஒரு பயிற்சியாளராக நிறைய கற்கிறேன்... என் குடும்பத்தை மிகவும் நேசிக்கிறேன்... என் பாரதியை சுவாசிக்கிறேன்... எல்லா வகை படங்களும் பார்க்கிறேன்... பலவகை பாடல்களையும் கேட்கிறேன்... கடவுளை நம்புகிறேன்... மூடநம்பிக்கைகளை எதிர்க்கிறேன்... எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்... அம்மகிழ்ச்சியையே மற்றவருக்கு கடத்தவும் விரும்புகிறேன்... எனது முதல் நூல் "மாணுடைய பேரரசே" வெளியிட்ட நேர்மறை அதிர்வலைகள் இன்னும் எழுதிடத் தூண்டுகின்றன... "நின்னைச் சில வரங்கள் கேட்பேன் அவை நேரே இன்றெனக்குத் தருவாய் எந்தன் முன்னைத் தீவினைப் பயன்கள் இன்னும் மூளாது அழிந்திடல் வேண்டும் என்னைப் புத்துயிராக்கி எனக்கேதும் கவலையறச் செய்து மதிதன்னை மிகத் தெளிவு செய்து என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய் என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்" - பாரதி வாழிய செந்தமிழ்... வாழ்க நற்றமிழர்... வாழிய பாரத மணித்திருநாடு...