Clubhouse logo

Sathya Sanjeevi

@sathyasanjeevi

107

friends

Sathya sanjeevi Male, 30 .... Writer Sinlge, living in chennai .... Am a Traveler. ... Soul searching person! எனது பழைய club house பக்கத்தினை மீட்க முடியாததால் புதிய அவதாரம் (அதே பெயரில்) எடுத்திருக்கின்றேன்.. ஆயிரக்கணக்கான புத்தகங்களை வாசித்திருக்கின்றேன்.. நூற்றுக்கணக்கான திரைப்படங்களை பார்த்திருக்கிறேன்.. பேச்சின் வழியேச் சேதிகளைப் பகிர ஆயிரம் கருத்துக்கள் இருப்பினும் மௌனப் புன்னகையை உதிர்த்து அமைதியாய் கடந்து செல்லும் எளிய மனிதன் எழுத தொடங்கினால், எவ்வித அற்புதம் நிகழுமோ அதுவே எந்தன் எழுத்தின் ஆதி காரணம் என்று துணிந்து கூறுவேன்.. ஏதிலியாய் பயணியாய் அடையாளமற்ற நாடோடியாய் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாவட்டத்தில் வசிப்பேன் .. ஊர் உலகம் சுற்றுவது அன்பிற்குரிய மனிதர்களை சந்திப்பது என என்னுலகம் மிக மிக சிறியது.. வாழ்நாள் முழுதும் தனியனாய் வாழ விரும்பி பயணிக்கிறேன்.. அதே சூழலில் உடன் பயணிக்க பெண்ணை தேடியும் அலைந்து திரிகின்றேன்.... எனது கதைகள் மிக காத்திரமாக எல்லையின்றி எதார்த்த உலகத்தை படம் பிடிப்பதாகவே இருக்கும் என்று அவதானிக்கிறேன்... தனிமனிதர்களின் வாழ்வை குறித்து எழுதப்போவதில்லை.. அது எனது வேலையும் இல்லை.. ஆனால் புனைவின் வழியே எதார்த்த மானிடர்களின் பரிபூரண அனுபவங்களை எந்த வித ஒளிவு மறைவு இன்றி அப்படியே கதையாக்கம் செய்ய இருக்கின்றேன்.. ஆதலால் , கொள்கை கோட்பாடுகளை கொண்டு ஆய்வு மேற்கொள்வோர் எனை கடந்து செல்வது நலம். சிருங்கார இலக்கியத்தின் ரசிகன்.. பெண்களின் வன்,மென் உணர்வுகளை , பேரன்பின் நிமித்த காமத்தை எழுத்தின் வழியே வெளிப்படுத்த விரும்பும் கலா ரசிகன் நான் ..... #Sathyasanjeevi