Abu Abubakr
@abubukr
2
friends
🇮🇳 இறைவனின் வேதம் என்றாலே கண்மூடி பின்பற்றவேண்டும் என்று சொல்பவர்களுக்கு மத்தியில் மனிதர்களுக்கு வழிகாட்ட அருளிய வேதமான குர்ஆனை மனிதர்கள் சிந்திக்க வேண்டும் என்றும் மனிதர்கள் ஆய்வு செய்து விளங்குவதற்காக குர்ஆனில் ஏராளமான சான்றுகளை சொல்லியிருப்பதாக சொல்லியுள்ளான் அல்லாஹ் 👇🏿 அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா? [அல்குர்ஆன் 47:24] மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதைச் சிந்திக்கட்டும். [அல்குர்ஆன் 86:5] "முன்னர் எந்தப் பொருளாகவும் இல்லாதிருந்த நிலையில் அவனைப் படைத்தோம்" என்பதை மனிதன் சிந்திக்க வேண்டாமா? [அல்குர்ஆன் 19:67] நாமே உங்களைப் படைத்தோம். நீங்கள் நம்ப மாட்டீர்களா?நீங்கள் விந்தாகச் செலுத்துகிறீர்களே அதைச் சிந்தித்தீர்களா?அதை நீங்கள் படைத்தீர்களா? அல்லது நாம் படைத்தோமா?முதல் தடவை படைத்ததை நீங்கள் அறிந்துள்ளீர்கள்! படிப்பினை பெற மாட்டீர்களா? [அல்குர்ஆன் 56:5758,59&62] நீங்கள் பயிரிடுவதைச் சிந்தித்தீர்களா? நீங்கள் அதை முளைக்கச் செய்கிறீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கிறோமா?நாம் நினைத்திருந்தால் அதைக் கூளமாக்கியிருப்போம்." [அல்குர்ஆன் 56:63,64,65] நீங்கள் அருந்தும் தண்ணீரைப் பற்றிச் சிந்தித்தீர்களா?மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்கினோமா?நாம் நினைத்திருந்தால் அதை உப்பு நீராக்கியிருப்போம். நீங்கள் நன்றி செலுத்த மாட்டீர்களா? [அல்குர்ஆன் 56:68,6970] வானங்களையும், பூமியையும் படைத்து அவற்றைப் படைப்பதில் சோர்வு ஏதும் அடையாத அல்லாஹ், இறந்தோரை உயிர்ப்பித்திட ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் சிந்திக்கவில்லையா? [அல்குர்ஆன் 46:33] உங்களை வீணாகப் படைத்துள்ளோம் என்றும் நம்மிடம் திரும்பக் கொண்டு வரப்படமாட்டீர்கள் என்றும் நினைத்து விட்டீர்களா? [அல்குர்ஆன் 23:115] "வானங்களும் பூமியும் படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். "எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை (என்று அவர்கள் கூறுவார்கள்)." [அல்குர்ஆன் 3:191] வானங்களில் உள்ளவை, பூமியில் உள்ளவை அனைத்தையும் அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. [அல்குர்ஆன் 45:13] "(நமது) வலிமையால் வானத்தைப் படைத்தோம். மேலும் (அதை) நாம் விரிவுபடுத்துவோராவோம்."[அல்குர்ஆன் 51:47] "பூமியை விரித்தோம். அதில் முளைகளை நாட்டினோம். அதில் எடை வரையறுக்கப்பட்ட ஒவ்வொரு பொருளையும் முளைக்கச் செய்தோம்." [அல்குர்ஆன் 15:19] "பூமி, உங்களை அசைத்து விடாதிருக்க அதில் முளைகளையும், நீங்கள் வழியறிவதற்காக பல பாதைகளையும், நதிகளையும், பல அடையாளங்களையும் அவன் அமைத்தான். நட்சத்திரத்தின் மூலம் அவர்கள் வழியை அறிந்து கொள்கின்றனர்." [அல்குர்ஆன் 16:15-16] [அல்குர்ஆன் 17:37] "அல்லாஹ் உங்களைப் பூமியிலிருந்தே வளர்த்துப் பெரிதாக்கினான். அவர்களால் பூமி எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதை அறிவோம். [71:17 & 50:4]