Lokesh
@_wolf_pride
44
friends
இறைவா எனக்கு ஏன் இந்தச் சோதனை” என்று புலம்பாதே; மரத்திற்கு இலையுதிர் காலத்தை வைத்தவன், வசந்த காலத்தையும் வைத்திருக்கிறான்; அதேபோல் நம்மையும் நிரந்தர துன்பத்தில் வைத்திருக்கமாட்டான்.. எத்தனை படிக்கட்டுகள் என்று அச்சப்பட வேண்டாம்; உள்ளத்தில் இறைநம்பிக்கை இருந்தால் செயலில் வெற்றி கிட்டும்.. உன்னிடத்திலும் இறைவனிடத்தில் பூரண நம்பிக்கை இருந்தால்; எல்லா காரியத்திலும் வெற்றி நிச்சயம்.. உனக்கு எவ்வளவு பெரிய சோதனை என்று இறைவனிடம் சொல்லாதே; உனக்கு துணையாக இருப்பவர் எவ்வளவு பெரிய இறைவன் என்று அந்த சோதனையிடம் சொல்.. குறைகளைத் தீர்த்துவைக்கும்போது நாம் கடவுளிடம் நம்பிக்கை வைத்திருக்கிறோம்; குறைகளைத் தீர்க்காதபோது இறைவன் நம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று அர்த்தம்.. தன்னை அறிந்தவன் ஆசைப்படமாட்டான்; உலகை அறிந்தவன் கோபப்படமாட்டான்; இந்த இரண்டையும் உணர்ந்தவன் துன்பப்படமாட்டான்.. இழந்ததை நினைத்து வருந்தாதே; இறைநம்பிக்கை இருக்கும்போது நீ எதை இழந்தாலும், அது வேறொரு வடிவில் உன்னைத் தேடிவரும்.. சிவ சிவ